யாழில் டெங்கு பரவும் சூழல்: மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) டெங்கு நுளம்பு பரவு சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
இணுவில் மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 08ஆம் திகதி இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பிலான தொடர் தரிசிப்பின் போது, டெங்கு குடம்பிகள் கண்டறியப்பட்ட இடங்கள் தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம்(13) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, மூவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , மூவரையும் எச்சரித்த நீதிமன்று மூவருக்கும் 4500 ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan