யாழில் 8 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna Northern Provincial Council Jaffna Teaching Hospital
By Theepan Oct 01, 2022 02:33 PM GMT
Report

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

டெங்கு நோயாளர்கள்

யாழில் 8 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Fever In Northern Provin

”கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அதிக மரணங்களும் பதிவாகின்றன.

கோவிட்-19 தொற்று காரணமாக. மாகாணங்களிற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் டெங்கு நோயாளர்கள் மற்றும் பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் மிக குறைவாகும்.

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த ஐந்து வருடங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டது.

மரணத்திற்கான காரணம் 

இவ் வருடம் நடந்த மரணங்களில் பெரும்பாலானவை நோயாளர்கள் தாமதமாக வைத்திய ஆலோசனையினை நாடியதாலேயே நிகழ்ந்துள்ளன.

எனவே காய்ச்சல் போன்ற டெங்கு நோய்க்கான அறிகுறிகளுடையவர்கள் உடனடியாக தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரையோ அல்லது வைத்தியசாலைகளினையோ நாடி உரிய வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது தொடர்பாக செப்டெம்பர் மாதம் (30.09.2022)ம் திகதி அரச அதிபர் தலைமையில் யாழ். மாவட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

அவ்வாறே எதிர்வரும் வாரத்தில் பிரதேச மட்ட டெங்கு தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டங்கள், பிரதேச செயலர் பிரிவு வாரியாகவும் கிராமிய மட்டங்களில் கிராம சுகாதார மேம்பாட்டு குழு கூட்டங்களும் இடம்பெறும்.

மக்களுக்கான எச்சரிக்கை

யாழில் 8 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Fever In Northern Provin

இனி வரும் மாதங்களில் யாழ். மாவட்டம் பருவப்பெயர்ச்சி மழையினை அதிகம் பெறும் காலமாகும்.

எனவே இம்மாதங்களில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். பருவப்பெயர்ச்சி மழையுடன் ஏற்படக்கூடிய டெங்கு பெருந்தொற்றினைத் தடுப்பதற்கு வாராந்தம் உறுதி செய்யப்படும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.

எனவே நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாகக் கருத்தில் கொண்டு எதுவித காலதாமதமும் இன்றி சமூக பங்களிப்புடன் நுளம்புகள் உருவாகும் மூலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பிரதேச செயலர் பிரிவுகளில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கின்றது.

டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் 

யாழில் 8 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Dengue Fever In Northern Provin

இது தொடர்ச்சியாக முன்று நாட்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவது டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் ஒக்டோபர் (3.10.2022)ம் திகதி முதல் (5.10.2022)ம் திகதி வரை சங்கானை, கரவெட்டி, ஊர்காவற்துறை, நல்லூர், சண்டிலிப்பாய், மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட உள்ளது.

அவ்வாறே எதிர்வரும் ஒக்டோபர் (12.10.2022)ம் திகதி முதல் (14.10.2022) ம் திகதி வரை சாவகச்சேரி, கோப்பாய், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மற்றும் தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளது.

இதன் போது சுகாதார உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் படையினர். பொலிஸ், கிராம உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்கள் அதிக டெங்கு ஆபத்து உள்ளதென அடையாளங் காணப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள அரச தனியார் நிறுவனங்கள், மதஸ்தலங்கள், பாடசாலைகள் , உயர் கல்வி நிறுவனங்கள், வீடுகள், தொழிற்சாலைகள் , கட்டடநிர்மாணங்கள் நடைபெறும் இடங்கள், மற்றும் மீன் பிடி துறைமுகங்கள் என்பனவற்றிற்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துள்ள இடங்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் பரிசோதிப்பதற்காக வருகை தருவர்.

எனவே உங்கள் வீட்டின் உட்பகுதிகளிலும், வெளிச் சுற்றாடலிலும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் உள்ளனவா என்பதனை கிரமமாக பரிசோதனை செய்வதுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும்.

அரச தனியார் நிறுவனங்களின் பொறுப்பதிகாரிகள் தமது நிறுவனங்களில் கூட்டு முயற்சியாக சிரமதான பணிகளை முன்னெடுக்கவும்.

மேலும் கைவிடப்பட்ட காணிகள், வீடுகள் என்பனவற்றின் உரிமையாளர்கள் அவற்றை துப்பரவாக பேணுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், அவ்வாறான இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துகள் காணப்படுமாயின் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

டெங்கு நோயிலிருந்தும் அதனால் ஏற்படக்கூடிய மரணங்களில் இருந்தும் எம்மையும் எமது சமுகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் ” என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US