கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு சுகாதார இராஜாங்க அமைச்சரும் டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவியுமான சீதா அரம்பேபொல வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு ஒழிப்புக்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் வார இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய சோதனைகள் ஒரு வாரத்திற்கு மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் தலைமையிலான இந்த நிபுணர் குழுவின் பணியை எளிதாக்க, ஒன்பது மாகாண துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும்,
இந்தநிலையில் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 47,000 க்கும் அதிகமான டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில்
இருந்து பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 5 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
