வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 35 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடந்த 02ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு என்கிற ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்று வருகிறது.
பொதுமக்களின் பூரண ஒத்துழைப்புடன் இடம்பெற்று வரும் மேற்படி வேலைத்திட்டத்தில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து விழிப்புணர்வூட்டி வருகிறார்கள்.
பொதுமக்கள் பாராட்டு
தனித்தனியாக கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்த பின், வாராந்தம் வெள்ளி தோறும் ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளில் வேலைத்திட்டத்தை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரியான முறையில் குப்பை கூளங்களை உரியவாறு அகற்றி வருவதோடு, தற்போது டெங்கு தடுப்பு வேலைத்திட்டத்தையும் சிறப்பாக முன்னெடுக்கும் வடமராட்சி தெற்கு - மேற்கு பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன் மற்றும் பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றார்கள்.
யாழில் டெங்கு ஒழிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (17.01.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது, மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் இந்த வேலை திட்டத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.
குறிப்பாக திருநெல்வேலி, கொக்குவில், யாழ் நகரை அண்டிய பகுதிகளில் அதிகளவானோர் கடந்த இரண்டரை மாதங்களுக்குள் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள். ஆகவே, இது ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது.
மேலும், கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 2800 பேருக்கு மேற்பட்டவர்கள் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள்.
இது ஒரு பாரிய பிரச்சினை என்பதால் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தி - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
