அடையாள வேலை நிறுத்தம்: கடமைகளில் இருந்து விலக சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலக பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், இன்று (08.11.2023) முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய அனைத்து அறிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னேற்ற மீளாய்வு உட்பட அனைத்து கூட்டங்களிலும் பங்குபற்றுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் அடையாள வேலை நிறுத்தம்
முன்னதாக, அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பு செலவுகளுக்கு எதிராக உதவித்தொகையை உயர்த்தாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அந்த தொழில் நடவடிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காமையால் மேலும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்ததாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
