அவதானமாக செயற்படுங்கள்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மக்கள் அவதானம் செலுத்துமாறு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் டெங்கு பரவல் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் நீலங்கி சுபசேகர இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கடந்த காலங்களில் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் 100,000 சனத்தொகைக்கு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 505 ஆக உள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் சீதுவ, ஜாஎல, களனி மற்றும் நீர்கொழும்பு வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.