நாட்டில் பதிவான டெங்கு மரணங்கள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக பதிவாகியுள்ளது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.
இன்றைய தினம் (19.07.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, டெங்கு அதிக ஆபத்துள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை மீண்டும் 50 சத வீதமான ஆக அதிகரித்துள்ளது.
அதிகிக்கும் நோயாளர்கள்
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆகும்.
வருடத்தில் 53,700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவற்றில் மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை 26,702 என அந்த அறிக்கையில் கூறப்படுகிறது.
அத்துடன் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்தவேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |