யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 2024.10.13 - 2024.10.15 ஆம் திகதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு களப்பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ''2024.10.13 கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்போடு கிராம மட்ட அமைப்புக்களை வலுப்படுத்தவுள்ளோம்.
அவர்கள் மூலமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பொது மக்கள் குடியிருப்புக்களில் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
2024.10.14 அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.

2024.10.15 அனைத்து பாடசாலைகள் (காலை), தனியார் கல்வி நிலையங்கள் (மாலை) டெங்கு பரம்பல் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை கிராம மட்ட உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதுடன் மேற்படி நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற மற்றுமொரு கலந்துரையாடலில் , இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் (ESPD) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக யாழ் மாவட்டத்தில் இதுவரை தொழிலி்ல் இணைப்புச் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றம் தொடர்பாக இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக சேவை
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , “மாவட்டத்தில் சென்ற வருடம் வழங்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் இலக்கினை அடைவதற்கு மாவட்டத்தில் சமூக சேவைகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பு அவசியமாகும்.

மேலும் JICA நிறுவனத்துடன் இணைந்து, 2022- 2025 வரையான காலப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களின் எண்ணிக்கை 50 என்ற இலக்கினை அடைவதற்கு பங்களிப்பு தெரிவித்ததுடன், இத் திட்டத்திற்குரிய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட ரீதியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை உரிய பிரதேச செயலகத்தில் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுகக்கப்படும்.
இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் ஜப்பான்JICA நிறுவனத்திற்கும் தமது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்றார்.
இக்கலந்துரையாடலில் ஜப்பான்JICA திட்ட இணைப்பாளர் Shimizy Takachi,
சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக
சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா்
கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        