அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள் : முதல் 13 நாட்களில் 6000இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
நேற்று வரை (13.08.2026) நாடு முழுவதும் மொத்தம் 91,346 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக
அதே காலகட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 68 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில்தான் அதிகபட்சமாக 29,968 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதே சமயம், நேற்று வரையிலான ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு இதுவரை மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 48,383 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்ட தரவுகளின்படி, தெற்கு மாகாணத்தில் 13,479 டெங்கு பாதிப்புகளும், மத்திய மாகாணத்தில் 8,160 டெங்கு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.