தீவிரமடைந்துள்ள டெங்குவின் தாக்கம் – 2026ல் இதுவரை 72 மரணங்கள்
2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,035 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,699 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
72 மரணங்கள்
இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்றினால் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 50,287 ஆகும். தென் மாகாணத்தில் 13,843 பேரும், மத்திய மாகாணத்தில் 8,647 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,808 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 20,248 ஆகும்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 18,842 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,931 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,125 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,122 பேரும் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 76 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri