யாழில் டெங்கு மற்றும் கோவிட் தடுப்பு செயலணி (Video)
யாழ். மாவட்டத்தில் கொவிட் தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கோவிட் தடுப்பு செயலணியின் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் (Ganabathipillai Mageshan) தலைமையில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலணி கூட்டத்தின் போது யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன், மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 51வது பிரிவின் இராணுவத் தளபதி சந்தன விக்ரமசிங்க, யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மண்ற தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
