கிழக்கிலும் கோட்டா கோ ஹோம் கம அமைத்து ஆர்ப்பாட்டம் (Photos)
மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்தை விரட்டியடிப்போம்; அரசியல் முறையைக் கவிழ்ப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்து செங்கலடி சந்திவரை சென்று அங்கு கோட்டா கோ ஹோம் கம அமைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், பௌத்த தேரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை 9 மணிக்கு ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து உணவு இல்லை, பால்மா இல்லை, எரிபொருள் இல்லை, மின்சாரம் இல்லை, கொள்ளைக்கார பொருளாதார முறைமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கொடு, அடிக்காதே அடிக்காதே விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, போன்ற அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து செங்கலடி சந்தியை சென்றடைந்தனர்.
அங்குள்ள செங்கலடி பஸ்தரிப்பு நிலையத்தில் கோட்டா கோ ஹோம் கம கூடாரம் அமைத்துத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து
அந்த பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam