திருகோணமலையில் சிறைச்சாலை அதிகாரியொருவருக்கு விளக்கமறியல்
திருகோணமலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (19) சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளில் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து அவர்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக குறித்து ஜெயிலர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ஏ.துலாஜ் மதுசங்க (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அதிகாரி திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 13 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri