இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் (Video)
யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டமானது இன்றையதினம் (01.09.2023) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் கடற்றொழில் சமூகங்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டக்காரர்கள் "அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே,கடற்றொழில் அமைச்சரே இந்திய இழுவை படகுகளின் வருகையை நிறுத்துங்கள், கைது செய் கைது செய் இந்திய இழுவைப் படகுகளை கைது செய் என கோசமிட்டு, பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் முடிவில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



