கொழும்பில் ஆர்ப்பாட்ட களத்தில் கோட்டாபய போன்று வேடமிட்ட நபர் (Video)
2022 ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆரம்பமான மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்ட களத்திற்கு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
இதனை முன்னிட்டு இன்றைய தினம் (09.04.2023) காலை காலிமுகத்திடலில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி முகத்திடலில் கலந்து கொண்ட சில முன்னணி ஆர்ப்பாட்ட செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பல பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று வேடமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
