மாங்காடு சரஸ்வதி வித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்(Photos)
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் நூற்றாண்டு விழாக்காணும் பாடசாலை எங்கே, பிரச்சினையை உப அதிபராக நியமித்தது ஏன், கதிரைக்கு ஆள் தேவையில்லை அதிபர் ஒருவேரே இங்கு தேவை, மேலதிக ஆசிரியர்களும், முடியாத புத்தகமும், சுயாதீனமாக நீருமில்லை சுத்திகரிக்க ஆளுமில்லை, மாணவர்களுக்கு ஏற்படும் அநீதியைச் சீர்செய்வது யார்,
பரீட்சைகளின் சித்தியின்மைக்கு காருணம் யார், மாணவர்கள் வேறு பாடசாலைக்குச் செல்வது ஏன், தேர்ச்சியின் உயர்ச்சியா மாணவர்கள் வெளிநாடு செல்வது, காலவதியான அதிபரும் சீரழிந்த மாங்காடும், பரிதாபம் மாணவர்கள், வேண்டும் வேண்டும் புதிய தகுதியான அதிபர்,
பாடத்திற்கு அமைய ஆசியரிர்கள், உயர் அதிகாரிகளே அதிபருக்குத் துணைபோக வேண்டாம், செயலாளர் அவர்களே ஆளுடையுடைய அதிபரை உடன் நியமி, உள்ளிட்ட பல வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மாங்காடு சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் குறித்த பாடசாலை அதிபரிடம் கருத்துக் கேட்பதற்காக பாடசாலைக்குள் ஊடகவியலாளர்கள் சென்றபோது பாடசாலையின் உட்பக்கமாக வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது.
எனினும் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளிடம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து,
அவர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.







பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam