இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய: ராமேஸ்வரம் போராட்டம்

Srilanka Protest Fishermen Tamilnadu
By Ashik Mar 26, 2022 10:37 AM GMT
Report

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து இலங்கை சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கடற்தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களை படகுடன் விடுதலை செய்யக்கோரி இன்று (26) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த தமிழக கடற்தொழிலாளர்களை நிர்வாணப்படுத்தி விசாரித்த இலங்கை அரசுக்கு ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறைமுகத்திலிருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்தொழிலாளர்கள் அனுமதிச்சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர்.

கடற்தொழிலாளர்கள் அன்றிரவு தனுஷ்கோடிக்கு இரனைதீவுக்கும் இடையே கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 கடற்தொழிலாளர்களைஅவர்களது 2 விசைப்படகுடன் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தி இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறையில் உள்ள கடற்தொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யக் கோரி கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை அரசு நிர்வாணப்படுத்தி விசாரிப்பதாகவும், கைது செய்யப்படும் கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி தாகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் இலங்கை சிறையில் இருந்து விடுதலையான கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசின் இந்த செயலுக்கு ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US