வீதிகள் மூடப்படலாம்! ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாகலாம் - கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பிலுள்ள அமெரிக்க பிரஜைகள், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொழும்பைச் சுற்றிப் பயணிப்பது கடினமாகலாம் எனவும் வீதிகள் மூடப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பௌத்த பிக்குகள் முன்னணியினர் முற்பகல் 9.30 மணிக்கு விக்டோரியா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்த குழு இடம்மாறி கொழும்பு முழுவதும் செல்லலாம். தொழிற்சங்கங்களின் பேரவை பிற்பகல் 2 மணிக்கு யூனியன்பிளேஸ் ஹைப் பார்க் நோக்கி பேரணியாக செல்வதற்கு முன்னர் கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மருதானை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஒன்றுகூடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மோதலாக மாறி வன்முறையாக மாறும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது.
எனவே இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்குமாறும், பெரிய கூட்டங்கள்,
எதிர்ப்புகள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையாக
இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
