காத்தான்குடி நகரசபையின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

of the kattankudy municipal council
By Independent Writer Mar 13, 2021 06:15 PM GMT
Report

மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுற்று மதில் அமைக்கும் நடவடிக்கைக்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து, மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.இவ்வார்ப்பாட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

பதவி மோகத்தால் எமது நிலங்களைத் தாரை வார்க்காதே, எமது பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகரசபையே மூக்கை நுழைக்காதே, எமது விளையாட்டு மைதானம் எமக்குரியதே, ஆக்கிரமிக்காதே ஆக்கிரமிக்காதே எமது பகுதியை ஆக்கிரமிக்காதே, தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே, இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்கும் செயலை நிறுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

"காத்தான்குடி ஆரையம்பதி பிரதேச எல்லையில் அமைந்துள்ள திருநீற்றுக்கேணி விக்டர் விளையாட்டு மைதானமானது மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகத்திற்குரிய அரச காணியாக இருந்து பின்னர் பிரதேச செயலாளரினால் உத்தியோகப்பூர்வமாகப் பிரதேச சபைக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அம்மைதானத்தில் காத்தான்குடி நகரசபையினால் சுற்று மதில் அமைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

இது சட்ட நடைமுறைக்கு முரணான விடயம். எமது பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் எமது சபையின் அனுமதியின்றி இன்னுமொரு சபையினால் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதென்பது எதிர்காலத்தில் அம்மைதானம் காத்தான்குடி நகரசபைக்குச்சொந்தமானது என அவர்கள் சொந்தம் கொண்டாடுவதற்கு ஏதுவாக அமைந்து விடும். இவ்வாறு எமது நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இது தொடர்பில் நாங்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதனாலேயே இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டோம். இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள், பிரதேச சபைத் தவிசாளார் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய கவனம் எடுத்து எமது பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தில் அத்துமீறிய செயற்பாடுகளை மேற்கொள்வதைத் தடுத்து அதனை மீட்டுத் தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

பின்னர் மண்முனைப் பற்றுப் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடியதுடன், இவ்விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரதேச சபைத் தவிசாளரிடமும் மேற்படி விடயங்கள் தொடர்பிலான மகஜர் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

மேற்படி விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும், மேலும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் எடுப்பதற்கு ஆவன செய்வதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி விளையாட்டு மைதானப் பிரச்சினை 2005ம் ஆண்டுக் காலம் தொடக்கம் இருந்து வருகின்றது. நான் தற்போதுதான் தான் சபையினைப் பொறுப்பெடுத்திருக்கின்றேன்.

இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் எனவும், இவ்விளையாட்டு மைதானம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக பிரதேச சபைக்குக் கையளிக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை எவ்வித ஆவணங்களும் இல்லை எனவும், அது தொடர்பில் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பிலேயே ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US