கொழும்பில் மணிக்கூடு கோபுரத்தில் ஏறி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! (Video)
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் போராட்டம் வெடித்துள்ள நிலையில், தற்போது கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ போன்ற பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் காரணமாக கொழும்பில் முக்கிய வீதிகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொலன்னாவ பகுதியிலும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மணிக்கூடு கோபுரத்தில் ஏறி அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




