திருகோணமலையில் பொலிஸாரின் செயற்பாட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்(Photo)
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது மக்கள் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சேருநுவர பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞர்கள் மூவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் செயற்பாடு
சேருநுவர இந்தனஹலே பகுதியில் மூன்று இளைஞர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதை கண்டித்தே பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பெண்கள் பலர் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆர்பாட்டம் நிறைவு
இதனால் பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
பின்னர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் சமரசம் செய்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டோரை அனுப்பி வைத்துள்ளார்.



