ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக கொழும்பில் வீதிக்கிறங்கிய பொதுமக்கள்
கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்தவாரம் இந்தியாவில் இலங்கை தொடர்பில் முன்வைத்த கருத்தானது கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
ஹரின் பெர்னாண்டோவைபோல் சிறுபான்மை சார்ந்த அரசியல்வாதிகளோ மக்களோ ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தால் உடனே கைது செய்யப்படுவார்கள்.
ஆனால் இவர் ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.
உயிர்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஹரின் பெர்னாண்டோ முன்வைத்திருந்தார்.
அமைச்சர்களின் குற்றங்களை ஜனாதிபதியாலும் தட்டிகேட்க முடியாதுள்ளது. இந்த நாட்டை மொத்தமாக விற்பனை செய்துவிட்டார்கள்.
இன்னும் சிறிதுகாலத்தில் எமது இளையோர் சமுதாயம் அடிமை வாழ்க்கையையே வாழ வேண்டும்.
அதானி உள்ளிட்ட பல முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வரவுள்ளனர்.
மேலும், யாழ் மக்கள் நிம்மதியாக வாழுவதை இந்த அரசாங்கம் விரும்புவதில்லை. அவர்களுடைய சொத்துக்களையும் விற்க முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில்எதிர்வரும் தேர்தலிலாவது மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |