மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து தீ பந்தம் ஏந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து கொழும்பு கொட்டாஞ்சேனையில் தீ பந்தம் ஏந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வடகொழும்பு பிரதான அமைப்பாளர் ராம் தலைமையில் இன்று (01.11.2023) மாலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில் கொட்டாஞ்சேனை பொலிஸார் அதற்கு தடைவிதித்தனர்.
யாழ்ப்பாணத்திலும் ஆர்ப்பாட்டம்
மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் யாழ்.கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இன்று தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி- கஜிந்தன்








பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
