நைஜரில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்பு! அதிகாரத்தை கைப்பற்றி அதிரடி காட்டும் இராணுவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி முகமது பாசும் (Mohamed Bazoum) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி Mohamed Bazoum ஐ மீண்டும் அப்பதவியில் அமர்த்துவதற்காக விடுக்கப்பட்டுவரும் அழுத்தங்களுக்கு அடிபணியபோவதில்லை என்று நைஜர் இராணுவ ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இராணுவ ஜெனரல் Abdourahamane Tiani,தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், இராணுவப்புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் விநியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
