ஜனாதிபதி வேட்பாளரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகள்
ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவும் அவரது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் நேற்று(19) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது, கோரிக்கைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளனர்.
இதற்கமைய, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல். இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உட்பட அனைத்து தனியார் காணிகளையும் விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இணங்கியுள்ளனர்.
கோரிக்கைகள்

வடக்கு மற்றும் கிழக்கில்உள்ள தொல்பொருள் இடங்கள் தொடர்பாகவும் வாக்குறுதி வழங்கப்படுள்ளது.
மேலும், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பதுடன், அதற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கைகள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் அடங்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு டலஸ் மற்றும் சஜித் இருவரும் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே, இன்று ஜனாதிபதி தேர்தலில் டலஸுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸும் இந்த
சந்திப்பில் கலந்துகொண்டார்.