தையிட்டி பிரச்சினைக்கான முடிவு இது தான்! ராகுல தேரர் பகிரங்கம்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை விடயமானது தற்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ளது.
யாழ். தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக கடந்த 11,12ஆம் திகதிகளில் போராட்டம் ஆரம்பமானது.
இந்நிலையில், தையிட்டி விகாரை விடயமானது அரசாங்கமும் இராணுவமும் சேர்ந்து செய்த சூழ்ச்சியாகும் என பொகவந்தலாவ ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தையிட்டி பிரச்சினையை இத்தோடு முடிக்க வேண்டும், அதனை தொடர்ந்தும் கொண்டு செல்ல கூடாது. மக்களுடைய தனியார் காணிகளை அவர்களுக்கே கொடுக்க வேண்டும்.
ஆனால், விகாரையை இடித்து பிரச்சினையை தொடர கூடாது. சம்பந்தப்பட்ட காணி உரிமையாளரிடம் பேசி பிரச்சினை தீர்க்க வேண்டும்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் சிங்கள- தமிழ் பிரச்சினைகள் முடியாது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
