முட்டைக்கான நிர்ணய விலையை நீக்க கோரிக்கை!
முட்டைக்கான நிர்ணய விலைத் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முட்டைக்கு நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து பாரிய சவால்களை எதிர்நோக்குவதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிர்ணய விலையை நீக்க கோரிக்கை
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு அரசாங்கம் முட்டைக்கான நிர்ணய விலையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த சங்கம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியினை தடை செய்தமையால் நாட்டில் தற்போது பாரிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கோழிகளுக்கான தீவனங்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.