அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் இறக்குமதி விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பல அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. தனியார் இறக்குமதியாளர்கள் அந்த பொருட்களை இறக்குமதி செய்கின்றனர்.
அவர்கள் இறக்குமதி செய்யும் விலைகளை விடக் குறைந்த விலையில் அந்த பொருட்களை விற்பனை செய்ய முடியாது.
முழு உலகத்திலும் விநியோக வலையமைப்பு மற்றும் உற்பத்தி செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன.
இதனைத் தவிர கப்பல் கட்டணம், கொள்கலன் கட்டணம், பொருட்களை வைத்திருப்பதற்கான கட்டணங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
