வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

Jaffna Mullaitivu Northern Province of Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Independent Writer Sep 20, 2024 04:43 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது.

அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

மீன் மற்றும் மரக்கறி வாங்குவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்


வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Delivery Of Ballot Boxes Mullaitivu

இதேவேளை வவுனியாவில் 128585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிஸார் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி - திலீபன்

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - லம்பேட்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Delivery Of Ballot Boxes Mullaitivu

மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட 108 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் 40 பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - யது

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் எடுத்துச் செல்லப்படுகின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள 511 வாக்குச் சாவடிகளுக்கு இவ்வாறு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Delivery Of Ballot Boxes Mullaitivu

யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

செய்தி - தீபன், கஜி

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடளாவிய ரீதியில் இடம்பெற இருக்கின்ற தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு நிலையங்களிற்கே இவ் வாக்கு பெட்டிகள் இன்று (20.09.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரச உத்தியோகத்தர்கள் கடமை

இம்முறை தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடக்கு மாகாண வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு | Delivery Of Ballot Boxes Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் காலை 7 மணி முதல் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தலில் 1506 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்தி - சதீசன்

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

உடனடியாக கைது செய்யபடுவீர்கள்! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US