நாணயத்தில் திட்டமிட்டு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்!
இந்திய பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழப்புரத்தில் வெளியிட்ட நினைவு நாணயத்தில் திட்டமிட்டு எங்கள் "தமிழ்" மொழியினை புறக்கணித்ததிற்கு எனது கடும் கன்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரபல இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சோழப் பேரரசு கட்டிய தமிழ்ப் பேரரசன் - எங்கள் ராசேந்திர சோழனுக்கு நினைவு "நாணயம்" வெளியிட்டவர்களே! எப்பொழுதும் எங்கள் மீது வன்மத்தோடு நீங்கள் திணிக்கும் இந்தி இருக்கிறது.
வேறு வழியில்லாமல் எங்கள் மீது பதியப்பட்ட ஆங்கிலம் இருக்கிறது. உலகின் அறிவாளுமைகளால் இப்பூமிப் பந்தின் ஆதி மொழியென ஒத்துக்கொள்ளப்பட்ட எனது "தமிழ்" இதில் எங்கே இருக்கிறது.
கண்டனம்
எல்லாம் சரி! தமிழன் மண்ணை ஆளும் தமிழ்நாடு அரசு இதனை ஏன் கண்டு கொள்ளவில்லை அல்லது எதிர்க்கவில்லை.
காத்திருங்கள்- ஒருவேளை "கீழடி"யை மேற்கண்ட கூட்டம் "பாரத நாகரீகம்" என்று "நாமம்" சூட்டியது போல் இவர்கள் "திராவிட நாகரீகம்" என்று "பட்டை"யை போட்டது போல் ராஜேந்திர சோழன் - எங்கள் "திராவிட பேரரசன்" என விழா எடுத்து விரைவில் "கல்" சாத்தலாம்.

அப்பொழுதும் அன்றைய நாளில் கூட்டம் கூட்டமாக போருக்கு சென்று உயிர்த்துறந்த கூட்டம் இங்கேயும் ஒன்று கூடி உயிர் உருக கைத்தட்டி மீதமிருக்கும் உரிமை இழக்கலாம். மீண்டும் சொல்கிறேன் நெருப்பை மீண்டும் எரிக்க முடியாது.
மீண்டும் மீண்டும் உங்கள் "நா நயத்தை" கறைப்படுத்திக் கொள்ளாதீர்கள். இனியாவது சம்மந்தப்பட்டவர்கள் தங்களை திருத்திக்கொண்டு வரலாற்றை மடைமாற்றாமல் வரலாறாகவே கொண்டாடுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri