தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை: டெல்லி மேல் நீதிமன்றத்தின் தீர்மானம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி மேல் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த மே 14ஆம் திகதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது.
இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது.
வெளியிடப்பட்ட அறிக்கை
அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய, டெல்லி மேல் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் “கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது.
தனி ஈழம்
இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ அதற்கான பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான பணிகளில் இரகசியமாக ஈடுபடுவதையோ அந்த அமைப்பு கைவிடவில்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து விட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அரசு அளித்த தகவலின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது. எனவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் அது அறிவித்து உள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடா்ந்து ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 6 நாட்கள் முன்

எச்சரிக்கையை மீறி அந்த நாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய தம்பதி சிக்கலில்... கவலையில் குடும்பம் News Lankasri

இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம் News Lankasri

கில்லி படத்தின் 200வது நாள்.. தளபதி விஜய்யுடன் ரஜினிகாந்த்! பலரும் பார்த்திராத புகைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் மனைவியை இளவரசி போல் நடத்துவார்கள்... யார் யார்ன்னு பாருங்க Manithan

43 வயதிலும் அழகில் மயக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. பிறந்தநாள் ஸ்பெஷல் Cineulagam
