இந்தியா மீது ட்ரோன் தாக்குதல்.. வெளியான அதிர்ச்சி தகவல்
டெல்லியில் ஹமாஸில் போல ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ள பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என கூறப்படுகின்றது.
அண்மையில், டெல்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் பலர் பலியாகியிருந்ததுடன் படுகாமடைந்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ட்ரோன் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.
டெல்லி குண்டுவெடிப்பு
குண்டுவெடிப்புக்கு முன்னதாக, "ட்ரோன்களை மாற்றியமைத்து, ரொக்கெட்டுகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இது இந்தியாவில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை மேலும் அதிகரித்துள்ளதுடன் குறித்த தாக்குதல்தாரிகளின் ஏனைய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |