பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குங்கள்!ரிசாத் பதியுதீன் கோரிக்கை
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பது என்பது பொய் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது கிடையாது. இஸ்லாத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாத காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்து பிணையில் விடுதலை ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மட்டக்களப்பு,ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போது இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் உள்ளது என்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதம் இருப்பது என்பது பொய்.இஸ்லாமிய தீவிரவாதம் என்பது கிடையாது. இஸ்லாத்தில் தீவிரவாதம் என்ற ஒன்று இல்லை. இஸ்லாமிய அமைப்புகளின் பெயரால் அந்நிய சக்திகள்,மேற்கத்திய சக்திகள் உலக நாடுகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துவதற்காக தான் இஸ்லாமிய பெயரால் பல அமைப்புக்களை உருவாக்கி தங்களுடைய சுயநலனுக்காக பல அழிவுகளை முஸ்லிம்கள் உள்ள நாடுகளில் ஏற்படுத்துகின்றனர்.
அதேபோல் ஒன்று தான் இலங்கையிலும் நடந்தது.எனவே இஸ்லாத்தில் தீவிரவாதம் என்பது ஒன்று கிடையாது. அதேபோல் நாம் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நடந்த அநியாயத்தை இறைவனிடம் ஒப்படைத்து உள்ளோம்.
அநியாயமாக தான் நான் சிறைபிடிக்கப்பட்டேன். சர்வதேசமே இன்று இலங்கையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் தாக்கத்தை உணர்ந்ததால் தான் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் எமது நாட்டின் ஏற்றுமதி பொருட்களுக்கு வழங்கியுள்ள ஜிஎஸ்பி பிளஸை கூட நிறுத்துவோம் என்ற அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களும்,தமிழ் இளைஞர்களும் அரசியல்வாதிகள் கல்விமான்கள் என பலர் இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவ்வாறான அத்தனை பேரையும் நீதிமன்றம் முன் கொண்டு வந்து அவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பை அரசாங்கம் செய்ய வேண்டும்.
இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற குடையின் கீழ் நீண்ட
காலம் அவர்களை தடுத்து வைத்திருப்பது என்பது நியாயம் இல்லை என்பது தான்
என்னுடைய கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri