கொழும்பில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்! உதவியை நாடுமா இலங்கை?
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கையில் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையின் அரசாங்க தரப்பினரையும் எதிர்கட்சி தரப்பினரையும் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான நான்காம் உறுப்புரிமை கலந்துரையாடலுக்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவினர் இலங்கை வந்துள்ளனர்
சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் நான்காவது உறுப்புரிமையின்படி ஆண்டு தோறும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், தமது உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் மீளாய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியமே தீர்வாக அமையும்.
எனவே நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட்ட அரசியல்வாதிகள் கோரிவருகின்றனர்.
எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது.