அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதில் தாமதம்: வர்த்தகர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
''தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதில் தாமதங்கள் ஏற்படலாம் என்பதால் யாழ்.வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் பொறுப்புடன் செயற்பட்டு பொதுமக்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலையில் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதனை வர்த்தகர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளாார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சில இடங்களில் வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அவை தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை கண்காணிப்புகளை மேற்கொள்ளும். தென்னிலங்கையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வருவது ஒரு வாரமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களைப் பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பிலும்
தற்போதைய நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பன தொடர்பிலும் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக
சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுடன் பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam