நுவரெலியாவில் மாபெரும் பட்டத் திருவிழா
நுவரெலியாவில் முதன் முறையாக மாநகர சபையின் ஏற்பாட்டில் பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது.
இன்றையதினமும்(17), நாளையதினமும்(18) இந்த பட்டத் திருவிழாவினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு போட்டிகள்
நுவரெலியா கிரெகரி வாவி கரையோரத்தில் இடம்பெறும் குறித்த பட்டப் போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனைப் பறக்கவிட்டுள்ளனர்.
அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த மீன்கள், பறவைகள், நட்சத்திரங்கள் போன்று அமைக்கப்பட்டிருந்த பட்டங்கள் பார்ப்போரை வியக்க வைத்துள்ளதுடன், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதனை ரசித்தனர்.
மேலும் இன்றும், நாளையும், நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் விசேட கலாசார விளையாட்டு போட்டிகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
