பூமியில் விழும் செயலிழந்த செயற்கைக்கோள்-நாசா
அமெரிக்காவின் நாசா நிறுவனத்திற்கு சொந்தமான செயலிழந்துள்ள செயற்கைக்கோள் ஒன்று 40 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியின் மீது உடைந்து விழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும் செயற்கைக்கோள்
செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து மெதுவாக கீழ் நோக்கி வந்துக்கொண்டிருப்பதாகவும் அது உடைந்து விழுவதால், ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் குறைவு எனவும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 ஆயிரத்து 450 கிலோ கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் இன்று வளிமண்டலத்திற்குள் நுழைந்து 17 மணி நேரத்தில் கீழ் நோக்கி வரும் போது எரிந்து துண்டுகளாகி விடும் என அமெரிக்க இராணுவத்தினர் கணித்துள்ளதாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில பாகங்கள் மாத்திரம் பூமியில் விழும் போது உயிர்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பூமியின் கதிர்வீச்சுகளை ஆராய கடந்த 1984 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இ.ஆர்.பி.எஸ் என்ற செயற்கைக்கோளே இவ்வாறு உடைந்து விழவுள்ளது.