கிழக்கு மாகாணத்தில் காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விசேட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்
கிழக்கில் காடழிப்பு தொடர்பில் அறிவிக்க விசேட அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் காடுகள் மற்றும் தொல்பொருள் இடங்களை அழிக்கும் நபர்களின் மீது கடும் சட்டத்தை அமுல்படுத்துமாறு பாதுகாப்பு படையினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் நடந்துகொண்டிருக்கும் காடழிப்பை தடுக்க தேவையான முடிவுகளை எடுக்க பாதுகாப்பு படைத் தலைவர்கள் பங்களிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், திருகோணமலை மாவட்டத்தில் காடுகளை சோதனையிட இராணுவத்தினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் படைப்பிரிவின் பிரதானிகளுக்கு இதன்போது அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் காடழிப்பு தொடர்பில் பாதுகாப்பு படையினருக்கு அறிவித்தல் வழங்க புதிய அவசர அழைப்பு இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த அவசர அழைப்பு இலக்கங்களை விளம்பரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 0707011117 என்ற இலக்கத்துக்கு தங்களுடைய முறைப்பாடுகளை தெரியப்படுத்த முடியும் எனவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பிரதேச மட்டத்தில் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் காடுகள் மற்றும் தொல்பொருள் இடங்களை அழிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு ஆளுநர் பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் பாதுகாப்பு செயலாளரின் அறிக்கையின்படி திருகோணமலையில் காடு அழிப்பிற்கு அரசாங்க சார்பு துறவி யார்? என கேட்டபோது, இது தொடர்பாக ஆளுநருக்கு கிடைத்த அனைத்து தகவல்களும் மேலதிக விசாரணைகளுக்காக பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்படும் எனவும் ஆளுநர் பதிலளித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தமன் தர்ஷன பாண்டி கோரள, ஆளுநரின் செயலாளர், கிழக்கு கடற்படை தளபதி மதநாயக்க, முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.









அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
