டிஜிட்டல் சேவைகளுக்கான 18 வீத VAT வரி தொடர்பில் புதிய தீர்மானம்
வெளிநாட்டு நிறுவனங்களால் இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத VAT வரி தொடர்பில் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த வரியை நடைமுறைப்படுத்துவதை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளதாக விசேட சுற்றறிக்கையின் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
VAT சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தியோகபூர்வ திருத்தங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எழுப்பியுள்ள கரிசனைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மின் - வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் மற்றும் நிதிநுட்பம் போன்ற சேவைகள் இந்த வரி வலைக்குள் கொண்டுவரப்படவுள்ளன.
ஆரம்பத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படவிருந்தது. பின்னர் அது ஏப்ரல் 1 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக காலநீடிப்பு
தற்போது இரண்டாவது முறையாக ஜூலை 1 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் இந்த வரி நடைமுறையாகும் பட்சத்தில், டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கும் உலகின் சுமார் 120 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[MWQUN6Z ]
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 18 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri