பாதுகாப்பு செயலாளர் அறுகம்குடாவுக்கு விசேட விஜயம்
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, அறுகம் குடா(Arugam Bay) பகுதியில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போதைய திட்டம் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் செயலாளர் உரிய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திள்ளார்.

இந்த விஜயத்தின்போது பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri