உயிர் அச்சுறுத்தல்:பாதுகாப்பு அமைச்சில் கடிதம் சமர்ப்பித்துள்ள தேரர்
ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவரான பத்திரமுல்லே சீலரத்தின தேரர் நேற்று பாதுகாப்பு அமைச்சில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் கடிதத்தை கையளித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
500 ரூபா வரையில் உயர்ந்த அமெரிக்க டொலரின் பெறுமதி! ரணில் காலத்தின் பின்னர் அநுர ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம்
பாதுகாப்பற்ற சூழல்
நான் ஒரு புத்த பிக்குவாக இந்த நாட்டில் எல்லா பிரச்சினைகளுக்கும் முன்னின்று சேவையாற்றியுள்ளேன்.இது வரை கட்சி தலைவர் என்ற ரீதியில் எனக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் இன்றை நிலையில் பல தரப்புகளில் இருந்து எனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நான் தனியாக இந்த கட்சியை நடத்தி செல்கிறேன்.நான் பாதுகாப்பு செயலாளருக்கு கையளித்துள்ள கடிதத்தில் பொலிஸ் பாதுகாப்பு அல்லது வேறு வழியில் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன்.
இந்த நாட்டில் பல தேர்தல்களில் எமது கட்சி போட்டியிட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் கூட நான் பாதுகாப்பு கோரவில்லை.

ஆனால் புத்தாண்டை அடுத்து அவசரமாக நான் இங்கு வந்தது பல இடங்களில் எனக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதனால் தான் பொது மக்கள் பாகாப்பு அமைச்சுக்கு இதை தெரியப்படுத்தி பாதுகாப்பு தருமாறு கேட்டுள்ளேன்.
இப்போது சில இடங்களில் எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.சிலர் ஏதோ குடித்து விட்டு தொலைபேசியில் மற்றும் நேரிலும் தாங்கள் சண்டியர் எங்களிடம் ஆட்கள் இருக்கிறது என்று அச்சுறுத்தல் விடுகின்றனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் கவனம் சொலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri