இலங்கையில் ஆயுதம் வைத்திருக்கும் சிவிலியன்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
இலங்கையில் ஆயுதங்களை வைத்திருக்கும் சிவிலியன்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக சிவிலியன்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை ஒப்படைக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத மீளாய்வு
ஆயுதங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிவிலியன்கள் வைத்திருக்கும் அனைத்து வகையான ஆயுதங்களையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதியளவில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வெலிசற கடற்படை முகாமில் ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்கள் அடங்கிய பற்றுச்சீட்டு
ஒப்படைத்த ஆயுதங்கள் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய பற்றுச்சீட்டு ஒன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சொத்துக்களை பாதுகாத்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு தேவைகளுக்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியதில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |