தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அழைப்பு விடுத்த யாழ். மாநகர முதல்வர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான ஒன்றுகூடல் இன்று (17.09.2022) மாலை யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையொன்றில் இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் 35வது நினைவேந்தலை ஒரு பொது கட்டமைப்பின் கீழ் உருவாக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் நிகழ்வு
சமயத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன்
ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
