குறைவடையவுள்ள மின்சார கட்டணம் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19.12.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறி்ப்பிட்டுள்ளார்.
இதன்படி மின் கட்டண திருத்தத்தின் போது அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சார சபை அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாலும் நீர்மின் நிலையங்கள் அதிகபட்ச கொள்ளளவில் இயங்குவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
