யாழில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அலங்கார வளைவு திறப்பு
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட அலங்கார வளைவு திறக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இவ் அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டுச் சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
தைத்திருநாளான இன்றைய தினம், நல்லூர் ஆலயத்திலிருந்து, திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில், செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
தவில், நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றுள்ளது.
சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.











இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri
