வெளிநாட்டுப் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி
இலங்கையில் இடம்பெற்ற போராட்டம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருவதற்காக பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் 45 வீதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டம் காரணமாக சுற்றுலாத்துறை பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சிக்கான காரணம்
எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்தடை போன்ற காரணிகளும் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தர விரும்பாமைக்கான காரணிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கைக்கு வருகை தரும் மாதம் எனவும், கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.