சபாநாயகருக்கு எதிரான தீர்மானங்கள்: சதாசிவம் வியாழேந்திரன் விளக்கம்
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிரான தீர்மானங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (17.03.2024) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எதிர்க்கட்சியினர் தற்போது உள்ள அரசியல் சூழலை பயன்படுத்தி தமது இருப்பினைத் தக்க வைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடாத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கணக்காய்வு அறிக்கைகள்
ஆளும்கட்சிக்குள் இருந்து சிறு பிரிவினர் நாடாளுமன்றத் தேர்தலை தான் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக கணக்காய்வு அறிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவர்கள் பணபலத்தை வைத்து வென்று விடலாம் என்று நினைக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |