கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு: அமைச்சரவையில் தீர்மானம்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இன்று விசேட சந்திப்பு
கடற்றொழிலாளர்களுக்கு தேவையான மண்ணெண்ணையை நியாயமான விலையில் எப்படியாயினும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் மண்ணெண்ணையை இறக்குமதி செய்வதில் காணப்படும் சவால்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு சக்தி
அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகிய மூவரும் இன்று சந்தித்து கலந்துரையாடி, குறித்த
பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றினை எட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
