கிளிநொச்சி மாவட்ட காணி திட்டமிடல் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான சு. முரளிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இன்று (05-03-2026) காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
காணி உரிமம் தொடர்பில் கலந்துரையாடல்
இதன்போது, வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள், தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட காணிகள் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், சிபாரிசு செய்யப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விபரங்கள் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், பொதுத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் காணிகளை கையளித்தல், நீண்டகால மற்றும் குறுகியகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான அனுமதி பெறுதல், காணி கச்சேரி மூலம் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் பிரதேச செயலக ரீதியாக ஆராயப்பட்டு, உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய கிழக்கு போர் சூழல் : நாளுக்கு நாள் உயரும் விலை
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam