சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பதவி நீக்க தீர்மானம்
முன்னாள் அரச புலனாய்வு சேவை(SIS) இயக்குநரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான(SDIG) நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை தேசிய பொலிஸ் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க தலைமையிலான ஆணையம் நேற்று(18) கூடி, சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை மதிப்பாய்வு செய்த பின்னர் இந்த முடிவை தேசிய பொலிஸ் ஆணையம் எடுத்துள்ளது.
ஒழுக்காற்று விசாரணை
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னர் பெறப்பட்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக நிலந்த ஜயவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவரை குற்றவாளி எனக் கண்டறிந்த ஒழுக்காற்று விசாரணையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்த நேரத்தில், ஜயவர்தன அரச புலனாய்வு சேவையின் இயக்குநராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 21 மணி நேரம் முன்
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan